மும்பை:
தொங்கு மக்களவை ஏற்பட்டால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரதமர் ஆவார் என சிவவேசனா கூறியுள்ளது.

சிவசேனாவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவுத் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில், “மக்களவை தேர்தலுக்குப் பின் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அப்போது ஏற்படும் தொங்கு மக்களவையில், தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரி பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெறாது.
கூட்டணி குறித்து முடிவு செய்ய பாஜகவுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதேபோல் எங்களுக்கும் அதிகாரம் உண்டு என்றார்.
Patrikai.com official YouTube Channel