டெல்லி: போராட்டம் நடத்தும் விவசாயிகள் மாவோயிஸ்டுகள் என்று கூறும் மத்திய அரசு ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் நுழைந்திருப்பதாக மத்திய பாஜக அரசு குற்றம்சாட்டியது.
இது குறித்து காங்கிரஸ், மூத்த தலைவரும், எம்பியுமான ப. சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், சீன ஏஜெண்டுகள், மாவோயிஸ்டுகள் என்று மத்திய அமைச்சர்கள் சித்தரிக்கிறார்கள்.
போராட்டம் நடத்துவோரில் விவசாயிகள் இல்லை என்றால், அவர்களுடன் மத்திய அரசு ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.