பெங்களூரு
கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி ரஜினிகாந்த் காவிரி அணைகளை பார்வை இட்டு நீர் இருந்தால் அவரே திறந்து விடட்டும் என கூறி உள்ளார்.
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா ராஜினாமா செய்தார். அதை ஒட்டி குமாரசாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவர் நேற்று பெங்களூருவில் பத்திரிகையாளரசி சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
குமாரசாமி, “கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இருந்தால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடப்படும். ஆனால் இங்குள்ள நிலையை தமிழகத்தில் உள்ளோர் புரிந்துக் கொள்ளவில்லை., நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்தே ஆக வேண்டும் என கூறுகிறர். அவர் கர்நாடகா வந்து இங்குள்ள அணைகளை பார்வை இடட்டும். நீர் இருந்தால் அவரே தாராளமாக திறந்து விடட்டும். நாங்கள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம்” எனக் கூறி உள்ளார்.