சென்னை: 

மிழகத்தில்  மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது, சிலைகளை உடைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவித்த நிலையில், தற்போது மத அமைதியை யாரேனும் சீர் குலைக்க நினைத்தால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபை கூடியதம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரையில் தேவாலயம் தாக்கப்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அதற்கு , தமிழக முதல்வர் பழனிசாமி பேரவையில் விளக்கம் அளித்து பேசினார். அப்போது, தேவாலயம் தாக்கப்பட்டதை அடுத்து, மதுரையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் உள்பட  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற முதல்வர், தமிழகத்தில் மத அமைதியை சீர்குலைக்க யாரேனும் முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.