நைரோபி:
பெண்ணின் ஆடை கவர்ச்சியாக இருந்தது என்று கூறி அவரது ஆடைகளைக் கிழித்த மூவருக்கு கென்யாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கென்யா. இந்நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த 2014ம் ஆண்டு, இளம்பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்தபோது அவரை மூன்று ஆண்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பிறகு அந்த பெண்ணின் ஆடை மிக கவர்ச்சியாக இருப்பதாகவும், இப்படி ஆடை அணிந்தால் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளத்தான் தோன்றும் என்றும் அந்த மூன்று இளைஞர்களும் கூறியிருகின்றனர்.
தொடர்ந்து பேசிவிட்டு அப்பெண்ணின் ஆடைகளை கிழித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்கள் மூலம் உலகெங்கும் பரவியது. உலகெங்கிலும் இருந்து பலரும் அந்த இளைஞர்களை கண்டித்தனர். கென்ய போலீசார் அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று நைரோபி நீதிமன்றத்தில் நேற்று அளிக்கப்பட்டது. பெண்ணின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் அவருடைய ஆடையை கிழித்து அவமதித்த 3 இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கென்யா நாட்டில் பெண்ணின் ஆடைகளை கிழித்த குற்றத்திற்காக மரண தண்டனை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.