டெல்லி:

டாக்டர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மது அருந்த கூடாது. ஆரோக்கியத்திற்கான விளம்பர தூதராக அவர்கள் திகழ வேண்டும் என இந்திய டாக்டர்கள் சங்கசக தெரிவித்துள்ளது.

சங்க உறுப்பினர்களாக உள்ள டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அனுப்பப்ட்டுள்ள ஆலோசனை சுற்றறிக்கையில் கூறுகையில், ‘‘ டாக்டர்கள் தினமான ஜூலை 1ம் தேதி, ஆசிரியர்கள் தினமான செப். 5ம் தேதி ஆகிய நாட்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

ஆண் டாக்டர்கள், 18 மில்லியும், பெண் டாக்டர்கள் 9 மில்லியும் மது குடிப்பது தான் பாதுகாப்பானது. ஐ.எம்.ஏ. கூட்டங்களில் மது வினியோகிக்கப்பட மாட்டாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் ‘‘நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து ஆலோசனை வழங்கும் டாக்டர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் வாழ்க்கை நடைமுறையையும் மாற்றி கொள்ள வேண்டும். நோயாளிகள் முன் கவுரவத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

டாக்டர்கள் அல்லாதவர்களுடன் சேர்ந்து மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கான விளம்பர தூதராக திகழ வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.