
டில்லி
ரிசர்வ் வங்கியின் 4ஆவது துணை ஆளுநராக மகேஷ்குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் படேல் பதவியில் உள்ளார்.
அவரின் கீழ் ஏற்கனவே 3 துணை ஆளுநர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 ஆவது துணை ஆளுநராக மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
இவருக்கு வங்கி நிர்வாகத்தில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளது.
இந்த தகவலை நிதித்துறை செயலர் ராஜிவ் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]