புனே
கொரோனா பரவுதல் குறித்து மூன்றாம் தொற்றாய்வு சுகாதார ஊழியர்களிடையே நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை சுமார் 1.02 கோடி பேர் பாதிக்கப்பட்டு சுமார் 1.47 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதற்காக தடுப்பூசிகள் போதும் பணியை அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த தடுப்பூசிகளை உடனடியாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோர் குறித்த் தொற்றாய்வுகளை இந்திய மருத்துவ ஆய்வுக் குழு நடத்தி வருகிறது.
இந்திய மருத்துவ ஆய்வுக் குழு கொரோனா பரவுதல் குறித்து இதுவரை இரண்டு தொற்றாய்வை நடத்தி உள்ளது. அந்த வரிசையில் நடந்து முடிந்த இரண்டாம் தொற்றாய்வில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரவுதல் குறித்து ஆய்வு நடந்தது. இதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி தேவைப் படுவோர் நிலை பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
வரும் வியாழன் முதல் மூன்றாம் தொற்றாய்வு நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வில் 70 மாவட்டங்களில் உள்ள சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 29000 பேரிடம் ஆய்வு நடைபெற உள்ளது. இரண்டாம் தொற்றாய்வு நடந்த அதே இடங்களில் இந்த ஆய்வும் நடைபெற உள்ளது. இந்த ஆய்வு விரைவாக நடத்தப்பட்டு சுகாதார ஊழியர்களில் யாருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட உள்ளது.