தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,500 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ICMR விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.
காசநோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் BCG தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியுமா மற்றும் தீவிரத் தொற்று பகுதிகளில் வசிக்கும் வயதான நபர்களிடையே நோயின் தீவிரத்தையும் இறப்பையும் குறைக்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கு ICMR பல மைய ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,500 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ICMR விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.
வயதானவர்களுக்கு BCG தடுப்பூசியின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஜூலை 15 ம் தேதி தமிழக அரசு சென்னையில் உள்ள ICMR-இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRD) சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ICMR-ன் உதவியுடன் BCG-COVID சோதனை, அகமதாபாத்தில் உள்ள தேசிய தொழில் சுகாதார நிறுவனம், போபாலில் சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி தேசிய நிறுவனம், ஜி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை, தேசிய நிறுவனம் ஜோத்பூர் மற்றும் புது தில்லியின் எய்ம்ஸ் ஆகியவற்றில் தொற்றுநோயற்ற நோய்கள் குறித்த சோதனைமுறை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
“ஆறு தளங்களில் மேற்கொள்ளப்படும் இந்த பல மைய ஆய்வின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படாத வயதானவர்களுக்கு, பேசில் கால்மெட் குயரின் (BCG) தடுப்பூசி வழங்கப்படும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் அதே BCG தடுப்பூசி இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும். நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது ”என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கூறினார்.
“கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், நோயின் தீவிரத்தையும், அதிதீவிரத் தொற்று உள்ள பகுதிகளில் வசிக்கும் வயதான நபர்களிடையே இறப்பு விகிதத்தையும் குறைக்க முடியுமா என்பதைப் பார்ப்பதே இதன் நோக்கம்” என்று விஞ்ஞானி கூறினார். இந்த ஆய்வில் பங்கேற்க ஒரு தன்னார்வலரின் தகுதியை தீர்மானிக்கும் ஆய்வில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் உள்ளன. தடுப்பூசிக்கு பிந்தைய ஆறு மாத காலத்திற்கு தன்னார்வலர்கள் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவார்கள்.
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமானால், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டு, கொரோனா தொற்றின் மீது BCG தடுப்பூசியின் செயல்திறன் மதிப்பிடப்பட்டு அளவீடு செய்யப்படும்.
Thank you: Money Control