டில்லி

ந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்னும் செய்தி தவறானது என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மறுத்துள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தினசரி சுமார் 10 முதல் 11 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.   கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தாக்க அதிகரித்து வருவதால் இது குறையும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்

இந்நிலையில் நவம்பர் மாத இறுதியில் கொரொனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என இந்திய மருத்துவ ஆய்வுக்கு குழு (ஐ சி எம் ஆர்) அறிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.  இந்த செய்தியால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  நவம்பர் மாதம் வரை பாதிப்பு அதிகரித்து வந்தால் தாங்க முடியாத அளவுக்கு அது செல்லும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஐ சி எம் ஆர் தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஐ சி எம் ஆர் ஆய்வு என செய்திகளில் வெளியாகி உள்ள தகவல்கள் தவறானதாகும்.   இது போல் எந்த ஆய்வும் ஐ சி எம் ஆர் நடத்தவில்லை.   இந்த செய்தியானது ஐ சி எம் ஆர் அதிகாரப் பூர்வ நிலைப்பாடு கிடையாது” என அறிவித்துள்ளது.