ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக கத்ரின் ஜேக்கப்ஸ்டோட்டிர் பதவி ஏற்கவுள்ளார். இடதுசாரி பசுமை இயக்கத்தை சேர்ந்த இவர் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 41. ஐஸ்லாந்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அரசியல் தலைவராக கத்ரின் உள்ளார்.

சுற்றுசூழல் மிக ஆர்வம் கொண்டனர். முன்னாள் கல்வி துறை அமைச்சர். 2040ம் ஆண்டில் கார்பனில் நடுநிலை வகிக்கும் பாதையை நோக்கி ஐஸ்லாந்தை அழைத்துச் செல்ல இவர் உறுதி எடுத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் ஐஸ்லாந்தின் 4வது பிரதமராக இவர் பதவி ஏற்கிறார். தேசிய அரசியல் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது மற்றும் ஊழல் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.