மும்பை:

சிசி உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும் என் பிசிசிஐ அறிவித்து உள்ளது.

பழைய விதிமுறைகன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே உலக கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அதன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், போட்டிக்கு சில வாரங்கள் முன்னதாக வீரர்கள் பட்டியலை அறிவித்தாலே போதுமானது.

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30–ந்தேதி தொடங்கும் ஆட்டம், ஜூலை 14–ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தின் உள்ள பிரபலமான 11 ஸ்டேடியங்களில்  போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் பங்கேற்க கூடாது என இந்திய கோரிக்கை விடுத்த நிலையில், ஐசிசி அதை நிராகரித்து விட்டது. இதன் காரணமாக உலக கோப்பைக்கான போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவுடன்  முதல் போட்டி  ஜூன் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் இந்தியாவை  தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறத.

உலக கோப்பை போட்டிக்கு தற்போதைய கேப்டன் விரோட் கோலியே கேப்டனாக தொடருவாரா அல்லது தோனி கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.