துபாய்:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பி அணிவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.


ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.

புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்திருந்தனர்.இந்த தொப்பிகளை வீரர்களுக்கு தோனி வழங்கினார்.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஐசிசி&ஐ பாகிதான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியிருந்தார்.

மேலும் பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃவட் சவுத்ரி தன் ட்விட்டர் பக்கத்தில், “ந்திய அணி இதை நிறுத்தாவிட்டால், காஷ்மீரில் நடக்கும் கொடுமையை உலகுக்கு காட்டும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ஐசிசி செய்தி தொடர்பாளர் கிளைர் பர்லாங் இமெயில் மூலம் அளித்துள்ள பதிலில், “இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்துகொள்ள, ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன் கூட்டியே அனுமதி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.