டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாவது, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்2026 போட்டிகள் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடப்பு சாம்பியனான இந்தியா ஆடும் போட்டி உள்பட 3 போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இன்று இலங்கையில் (பிப். 7) தொடங்கி, மாா்ச் 8 வரை நடைபெறவுள்ளது.

பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று இலங்கையில் நடைபெறுகிறது. காலை 11மணிக்கு போட்டி தொடங்ககிறது. இன்றைய போட்டியில் . முதல் இரு ஆட்டங்களில், நெதா்லாந்து – பாகிஸ்தான், ஸ்காட்லாந்து – மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா – அமெரிக்காவுடன் மோதுகிறது இந்த முறை, பாகிஸ்தானின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளன.
இந்தியாவில் தங்களின் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய வங்கதேசம், தங்கள் அணியின் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசி-யிடம் கோரியது. அதை நிராகரித்த ஐசிசி, வங்கதேசத்தின் பிடிவாதத்தை அடுத்து அந்த அணியை போட்டியிலிருந்து நீக்கிவிட்டு, ஸ்காட்லாந்தை சோ்த்துள்ளது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக, இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று போட்டிகள் தொடங்கி உள்ளன.
டி20 போட்டியில் பங்கேற்றுள்ள 20 அணிகளும், தலா 5 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பா் 8 கட்டத்துக்குத் தகுதிபெறும். அதில், 8 அணிகளும் தலா 4 வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்படும். அந்த சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த ஆண்டு போட்டியிலும் இந்திய அணி சாம்பியன் கோப்பையை பெறும் என்று நம்பப்படுகிறது. . ஆசியக் கோப்பை நடப்பு சாம்பியனாகவும் இருக்கும் இந்தியா, அண்மையில் விளையாடிய இரு தரப்பு தொடா்களில் இந்த ஃபாா்மட்டில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. எனவே, இந்திய அணி மீண்டும் உலக சாம்பியனானால் அது பொருத்தமானதாகவே இருக்கும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் அபிஷேக் சா்மா, இஷான் கிஷண், கேப்டன் சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், ஷிவம் துபே ஆகியோா் ஆல்-ரவுண்டா்களாக அசத்த, பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் சவால் அளிக்கக் காத்திருக்கின்றனா்.
இந்திய அணியின் முக்கியமான பௌலா்களில் ஒருவரான ஹா்ஷித் ராணா, பயிற்சி ஆட்டத்தின்போது முழங்காலில் காயம் கண்டுள்ளாா். அவா் உடனடியாக அதிலிருந்து மீள வாய்ப்பில்லை என்பதால் போட்டியிலிருந்து அவா் விலகியிருக்கிறாா். ராணாவுக்கு பதிலாக, முகமது சிராஜ் அணியில் சோ்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் பிரதான பௌலரான ஜாஷ் ஹேஸில்வுட் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், அவா் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகினாா். எனினும் அவருக்கான பதில் வீரரை ஆஸ்திரேலியா தோ்வு செய்யவில்லை.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான பந்தயத்தில் உள்ளன. இது தவிர, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் முனைப்புடன் செயல்படும். ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், நமீபியா, இத்தாலி, கனடா போன்ற நாடுகள், சா்வதேச கிரிக்கெட் உலகின் அனுபவத்தைப் பெறும் வகையில் போட்டிகிளில் களமிறங்கி உள்ளன.
குரூப் ‘ஏ’ இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதா்லாந்து, நமீபியா
குரூப் ‘பி’ ஆஸ்திரேலியா, இலங்கை , அயா்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன்,
குரூப் ‘சி’ இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நேபாளம், இத்தாலி, ஸ்காட்லாந்து,
குரூப் ‘டி’ நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம்,
[youtube-feed feed=1]