லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார்.

இந்த தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெய்ரூட்டில் இருந்து ஜெருசலேம் செல்லும் வழியில் இப்ராஹிம் குபைசி படுகொலை செய்யப்பட்டார்.

ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் இந்த தொடர்ச்சியான தாக்குதலுக்கு முடிவே இல்லாமல் போகும் நிலையில் தாக்குதலுக்கு குறுக்கே யாரும் வராதீர்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஏவுகணையையும், ராக்கெட்டையும் வைத்திருப்பவர்களுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் தொடரும், அவர்கள் அதை தங்கள் தங்கும் அறையில் வைத்திருந்தாலும் சரி அல்லது கேரேஜில் வைத்திருந்தாலும் சரி அவர்களின் வீடுகள் தகர்க்கப்படும்.

ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தாக்குவோம் இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பொதுமக்கள் விலகி இருங்கள்” என்று கூறியுள்ளார்.