டில்லி

நிறுவனங்களில் திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடிக்கான வழக்குகள் முதல் நிலையிலேயே தீர்வு காணப்பட்டுள்ளதாக நிறுவன விவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் பல நிறுவனங்கள் மேற்கொண்டு செயல்பட முடியாத அளவில் உள்ளன.  அத்தகைய நிறுவனங்களுக்கு உதவ அரசு ஒரு சட்டம் இயற்றியது.  அதன்படி கடந்த 2016 ஆம் வருடம் திவால் விதிமுறை அமலுக்கு வந்தது.

இந்த விதிமுறையின் மூலம் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிறுவனங்கள் சொத்து மற்றும் கடன் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு வழி செய்தது.

இது குறித்து மத்திய நிறுவன விவகார அமைச்சகம்,  ”இந்த விதிமுறையின் கீழ் 21,136 மனுக்கள் அளிக்கப்பட்டன.   இவற்றை மத்திய: நிறுவன விவகார அமைச்சகம் ஆய்வு செய்தது.  ஆய்வின் அடிப்படையில் முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன

இவ்வாறு முதல் கட்டத்துக்கு வந்த 2838 வழக்குகளில் 306 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.  மீதமுள்ள வழக்குகள் மேல் முறையீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அமைச்சகம் எடுத்த முதல் கட்ட நடவடிக்கையில் ரூ,3,74,931.30 கோடி மதிப்பிலான 9,653 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.   இவற்றில் அதிக தொகை உள்ள வழக்குகளான ரூ.1,56,814 கோடி மதிப்பிலான 161 வழக்குகளும் அடங்கும். “ எனத் தெரிவித்துள்ளது.