மும்பை:
தான் நலமாக இருப்பதாக மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, அந்நாட்டு அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர்.
இந்தியாவுக்கு வந்திருந்த அவருக்கு, திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து, மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அவரது எண்ணற்ற ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், பிரையன் லாரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,நான் நலமாக இருக்கின்றேன். புதன்கிழமை ஓட்டலில் சந்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.