ரெட்ஹில்ஸ்:
ரெட்ஹில்ஸ் அலமாதி அருகே ராணுவ நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை மீட்கும் பணியை ராணுவத்தினர் துரிதப்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான ரெட்ஹில்ஸ் அடுத்துள்ள அலமாதி பகுதியில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியிருந்த நிலையில், அந்த இடத்தை ராணுவ வீர்கள் அதிரடியாக மீட்டனர். அங்கிருந்து வீடுகள், கட்டிடங்களை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் தாண்டி, அலமாதி பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விமான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் விமான பயிற்சி அமைக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன. தற்போது ராணுவத்திற்கான தற்காலிக குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் (MoD) சோழவரம் ராணுவ விமான நிலையத்தை கைவிட்டு அரை நூற் றாண்டுக்கு மேலாகியும், இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆக்கிரமித்த நிலத்தை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளது. ராணுவத்துக்கு சொந்தமான அந்த இடத்தில் பல அரசியல் கட்சியினர் புறம்போக்கு நிலம் என்ற பெயரில் பட்டா வாங்கி, விற்பனை செய்துவிட்ட நிலையில், தற்போது, அங்குள்ள வீடுகள், கடைகளை இடித்து ராணுவம் கைப்பற்றி வருகிறது.
ஏற்கனவே ராணுவத்துக்கு சொந்தமான இடங்கள் என்று, அட்டந்தாங்கள் பகுதியில் உள்ள வீர பாண்டி நகர் மற்றும், பம்மதுக்குளம் ஈஸ்வரன் நகர் போன்ற இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானத்துறை மூலம் பத்திர பதிவு செய்ய தடைவிதித்து கடிதம் அனுப்பியத்தின் பெயரில் கடந்த மூன்று மாதமாக பத்திர பதிவு செய்யாமல் அமலில் உள்ளது.
ராணுவத்துக்கு சொந்த பம்மத்துக்குளத்தில் நான்கு தூண்களுடன் பழுதடைந்தநிலையில் ஒரு அடையாள இடுகை உள்ளது. மேலும் ஒரு இடுகை சேதமடைந்துள்ளது. அந்த இடுகைகளின் மீது எந்தவித அறிகுறியும் இல்லை. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடுகைகள் போர் விமானங்களை நிறுத்த பயன்படும் இரண்டு சிக்னல் பதிவுகள் மற்றும் வளைவு பாதையில் வைக்கப்பட்டிருந்த பெக்கான் விளக்குகள் அமைக்க பயன்படுத்தப்பட்டு உள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தற்போது இந்த இடத்தை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். அதற்கு அந்த பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.