டில்லி
இந்திய விமானப்படை பாகிஸ்தானை எதிர்க்க புதிய ராணுவ தளவாடங்கள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் முகாமிட்டிருந்த பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி பறந்து வந்த போது அதை விரட்டி சென்ற அபிநந்தன் ஒரு விமானத்தை வீழ்த்தியதாக கூறப்படுகிறது. அப்போது பாகிஸ்தானியரால் பிடிக்கபட்ட அபிநந்தன் உலக நாடுகள் அழுத்தம் காரணமாக விடுடல செய்யப்பட்டார். ஆயினும் எல்லயில் இன்னும் பதட்ட நிலை நீடிக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தனது போர் விமானங்களான எஃப் 16 ரக விமானங்கள் தாக்குதலுக்கு தயாராக எல்லையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதை ஒட்டி இந்திய விமானப்படையில் உள்ள மிராஜ் மற்றும் சு30 விமானங்களை தயாராக வைக்கப்பட்டுள்ளன. இரு பக்கத்தில் இருந்தும் இரவு நேரங்களில் ரோந்து விமானங்கள் பறந்தபடி உள்ளன.
இந்திய விமானப்படை தற்போது புதிய தளவாடங்களை வாங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தளவாடங்களில் வானத்தில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் வாங்க கோரிக்கை விடப்பட்டுளன. குறிப்பாக விமானப்படை விமானங்களில் உள்ள ஆயுதங்கள் போர் ஏற்பட்டால் சமாளிக்க போதுமான அளவுக்கு வாங்கப்பட வேண்டும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.