சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி வரும் சசிகலாவை, அமமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் பிரமாண்டமாக வரவேற்க தயாராகி வருகின்றனர். சென்னையில் பிரமாண்ட பேரணியை நடத்தி முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை   கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர், துணை முதல்வர் & அமைச்சர்கள் இல்லம் அமைந்துள்ள பகுதியில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா, தினகரனுன் உடன் பெரிய அளவிலான சசிகலாவின் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,  தமிழகம் அதிரும்ல…. எடுத்த சபதம் முடிப்பேன்…ராஜமாதாவே…, இரட்டை இலையும் நமதே, நாளையும் நமதே உள்பட என சசிகலாவை வரவேற்று வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

முதல்வர், துணைமுதல்வர் வீடுகள் முன்பு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வரும் சசிகலாவுக்கு போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அமமுகவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.