புதுச்சேரி :
23ந்தேதி கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தன்னை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வருமான குமாரசாமி தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், அதையேற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க கர்நாடக செல்வதாகவும் நாராயணசாமி கூறினார்.
மேலும், உச்சநீதி மன்ற உத்தரவுபடி, தமிழகம், புதுச்சேரிக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட குமாரசாமியிடம் வலியுறுத்துவேன் என்றும் கூறி உள்ளார்.
அதுபோல டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.