பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த  ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே)  திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து, அவரது கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை  கொடுத்துள்ளார்.

243  தொகுதிகளைக்கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு  இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, . அதன்படி, நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து, அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தலுக்கான  மனுத்தாக்கல் காலமும் முடிவடைந்துள்ளது.

இந்த நேரத்தில்,   ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) முக்கியமான முடிவை அறிவித்துள்ளார்.  நடைபெறும் மாநில சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். இதைத் தெரிவித்த பிகே, “கட்சி நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது, அதற்கு நான் கட்டுப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அக்டோபர் 6ந்தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிகே, ஜன் சுராஜ் கட்சி வெளியிட இருக்கும்  வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் நிச்சயம் உள்ளது. ஆனால்,  நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது அக்.9ம் தேதி தெரிய வரும் என்றார். ஆனால், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

தனது கட்சிக்கு 28 சதவீதம் ஓட்டுகள் பெறும்  நம்பிக்கை உள்ளது என்று கூறிய கிஷோர், ஒட்டுமொத்த கணக்கின்படி பார்த்தால் தேர்தலில் எங்களுக்கு இம்முறை 48 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்த நிலையில், அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியிருப்பது அவரது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்துசெய்தி நிறுவனத்தக்கு அளித்த பேட்டியில்,   என் போட்டி, கட்சியின் அமைப்பு செயல்பாடுகளில் என் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதால் நான் போட்டியிடவில்லை., இந்த முடிவு சரியானது” என்றார்.  கட்சிக்காகவும் தேர்தல் பணிகளுக்காகவும் அவர் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளதாக கூறிய பிகே,  ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக வேறு ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளோம்  என்றவர், பீகாரின் 243 தொகுதிகளில் சுமார் 150 தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த வெற்றி, நம் பார்ட்டியை தேசிய அளவில் செல்வாக்கு செலுத்தும்” என்று கூறியவர்த, தற்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமாரின் JD(U) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த  தேர்தலில் NDA கூட்டணி தோல்வியடையும் என்றதுடன், நிதீஷ் குமார் மீண்டும் CM ஆக முடியாது, தேஜஸ்வி, காங்கிரஸ் கூட்டணியான  JD(U) குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் கூட வெல்லாது.  காங்கிரஸ் மற்றும் RJD இடையே வேறுபாடுகள் தொடர்கின்றன” என்று அவர் கூறினார்.

JSP ஆட்சிக்கு வந்தால், மாஃபியா மற்றும் அநீதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். “ஆட்சி அமைந்த 30 நாட்களுக்குள் 100 அநீதி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் உறுதி அளித்தார்.

தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்! முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கருத்து…