புளோரிடா

திபர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முகக் கவசம் இன்றி கலந்து கொண்ட டிரம்ப் அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,

அடுத்த மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் தற்போதைய அதிபர் டிர்மப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன ஆகியோர் மோதுகின்றனர்.  இதற்கிடையே கடந்த வாரம் டிர்மப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

மருத்துவர்கள் அவரை தனிமையில் இருக்க வலியுறுத்தியும் அதை மீறி தாம் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாக்க கூறி மீண்டும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார்.   நேற்று டிரம்ப் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முகக் கவசம் அணியாமல் கலந்து கொண்டார்.

அவர் தமது பிரச்சாரத்தின் போது தாம் கூட்டத்துக்குள் சென்று அழகான பெண்கள் மற்றும் ஆடவர் உள்ளிட்ட அனைவருக்கும் முத்தம் கொடுப்பேன் எனப் பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.  அத்துடன் அவர் பங்கேற்றோர் மீது முகக் கவசங்களை தூக்கி வீசு உள்ளார்.  பார்வையாளர்களில் பலர் முகக் கவசம் இன்றி தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்துள்ளனர்.