காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி., “நாடாளுமன்றம் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்வேன்.
ராஜ்யசபாவில் கத்தைக்கத்தயாக பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுவதை நான் முதல்முறையாக கேட்கிறேன், இது வினோதமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று அவைக்கு 12:57 மணிக்கு வந்த நிலையில் அவையில் அமளி ஏற்பட்டதை அடுத்து 1 மணிக்கு அவையில் இருந்து வெளியேறினேன், பின்னர் நாடாளுமன்ற கேன்டீனில் 1:30 வரை இருந்தேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
நேற்று சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபையில் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் கத்தையாக கரன்சி நோட்டுகள் இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டெடுத்ததை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.