புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநகராக பொறுப்பேற்றுக்கொண்ட .தமிழிசை, அதிகார வரம்புக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் செயல்படுவேன் என்று தெரிவித்து உள்ளார். மேலும், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன் என்றும் உறுதி அளித்துள்ளர்.
புதுச்சேரி மாநில பொறுப்பு ஆளுநராக, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை இன்று காலை 9 மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன், அதற்கான திறன் மருத்துவரான என்னிடம் உள்ளது, துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சசோதரியாக இருப்பேன் என்றார்.
மாநில அரசு மீது, பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய மனு மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பேன் ,
ஒரு மாநில முதல்வர் மற்றும், துணைநிலை ஆளுநர்களின் அதிகார வரம்பு என்ன என்பது தனக்கு தெரியும் என்றவர், எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படுவேன் ‘.
மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன் என்றவர், தமிழில் உறுதிமொழி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை; ஆராதிக்கப்படுகிறது என்றார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில், நாமே தயக்கம் காட்டக் கூடாது, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.