அகமதாபாத்:

நான் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றேன். அரசுக்கு போல்ட், நட்டாக இருக்க விரும்பவில்லை என பதவியை ராஜினாமா செய்த குஜராத் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


குஜராத் ஹெச்கே. கலைக் கல்லூரியின் முதல்வராக ஹேமந்த் குமார் ஷா மற்றும் உதவி முதல்வராக மோகன் பர்மார் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அழைத்து கல்லூரி விழாவில் பேச வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதற்கு பாஜகவின் மாணவர்  தலைவர்கள் எதிப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி நிகழ்ச்சியை நடத்த முயன்றதால், கல்லூரிக்கே வந்து அவர்கள் மிரட்டல் விடுத்துச் சென்றனர்.

இது குறித்து கல்லூரி முதல்வரும் உதவி முதல்வரும் போலீஸில் புகார் செய்தனர். அதன்பின்னரும் அவர்களது மிரட்டல் தொடர்ந்தது. இதனையடுத்து, இந்த கல்லூரியின் அறக்கட்டளை தலைவராக இருக்கும் பிவி. ஜோஷியை இருவரும் சந்தித்தனர்.

ஜோஷி நோபல் பரிசு பெற்றவர், பத்மபூஷன் விருது பெற்றவர். குஜராத்தின் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கிறார்.

சந்திப்பின்போது, நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு ஜோஷி கூறினார். அப்போது நடந்த பேராசிரியர்கள் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் மற்றும் உதவி முதல்வர் தவிர ஏனைய பேராசிரியர்கள் நிகழ்ச்சி ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கல்லூரி முதல்வரும், உதவி முதல்வரும் பதவியை ராஜினாமா செய்தனர். நான் சுதந்திரமானவன். அரசாங்கத்துக்கு போல்ட்டாகவும், நட்டாகவும் இருக்க முடியாது என ராஜினாமாவுக்கான காரணத்தை கல்லூரி முதல்வர் ஹேமந்த்குமார் தெரிவித்துள்ளார்,