டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை வகித்தார். அவரது பணிக்காலத்தின்போது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாகவும், அவரிடம்  ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த சாமியாரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், நிர்வாக கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள், பங்குச்சந்தையின் ஏற்ற – இறக்கம் குறித்த முன்கூட்டிய கணிப்புகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டதாக சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும்,  ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி  தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. இவர், அல்கோ வர்த்தக மோசடி மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக 2016 இல் NSE இலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனந்த் சுப்ரமணியனை நியமித்தபோது ஆட்சியில் குளறுபடிகள் ஏற்பட்ட விவகாரத்தில், ராமகிருஷ்ணாவிடம் ரூ.3 கோடியும், சுப்ரமணியன் மற்றும் முன்னாள் எம்டி மற்றும் சிஇஓ ரவி நரேன் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும், வி.ஆருக்கு ரூ.6 லட்சமும் அபராதமாக செபி விதித்ததாகவும், தேசிய தேசிய பங்கு சந்தை தலைமை ஒழுங்குமுறை அதிகாரி மற்றும் இணக்க அதிகாரியாக இருந்தவர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

ராமகிருஷ்ணா என்எஸ்இயை விட்டு வெளியேறியபோது நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை மற்றும் சம்பளமாக ரூ.44 கோடி வழங்கப்பட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செபி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு   சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனைகள் செய்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.