அமெரிக்காவின் லாஸ்வேகாஸிலுள்ள கன்வென்சன் மையத்தில் 63-வது கிராமி விருது இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற யூட்யூபரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லில்லி சிங் பங்கேற்றுள்ளார். அவர், ‘i support farmers’ என்று எழுதப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வந்து விவசாயிகளுகு ஆதரவு தெரிவித்தார்.

மேலும், அந்தப் புகைப்படத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘சிகப்பு கம்பள விருது விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் அதிக கவனம் பெறும் என்பது எனக்குத் தெரியும். அதனால், ஊடகங்களே இதனுடன் ஒளிபரப்புங்கள்’ என்று குறிப்பிட்டு i stand with farmers என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.