மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் பாஜக மறுசீரமைப்பிற்க்காக அதன் முக்கிய தலைவரை மாற்றுவதாக பாஜக எடுத்த முடிவு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க பாஜகவின் நீண்டகால தலைவராக இருந்த ராகுல் சின்ஹா கட்சியின் இந்த முடிவை எதிர்த்து நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது கட்சிக்கு எதிராக நேரடியாக எந்த வார்த்தையும் உபயோகப்படுத்தாமல் நாசுக்காக கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் சின்ஹா.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழியில் தான் பேசிய வீடியோவை வெளியிட்ட ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளதாவது: கடந்த 40 ஆண்டு காலமாக நான் பாஜவிற்க்காக பணியாற்றி வருகிறேன், பிறந்ததிலிருந்தே நான் பாஜகவிற்கு தொண்டு செய்துள்ளேன், அதற்காக இதுவரை எவ்வித வெகுமதியும் நான் பெற்றதில்லை, திரிணாமுல் காங்கிரசிலிருந்து சிலர் பாஜகவில் இணைவதற்காக நான் தற்போது பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்ற நிலைமை வந்துள்ளது. இதைவிட துரதிர்ஷ்டவசமாக எதுவும் இருக்க முடியாது.
இதைத் தாண்டி நான் வேறு எதையும் பேச விரும்பவில்லை, எனக்கு கட்சி அளிக்கும் பெரும் வெகுமதிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் என்ன கூறினாலும் அடுத்த 10- 12 நாட்களுக்குள் பாஜகவிலிருந்து விரட்டி அடிக்கப் படுவேன்.
பாஜக மேற்கு வங்கத்தில் தனது கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் சின்ஹாவுக்கு பதிலாக அனுபம் ஹஸ்ராவை தேசிய செயலாளர்களில் ஒருவராக மாற்றப் போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது