ஜூரிச், சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஐ ஃபோன் பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. இங்கு ஜூரிச் நகரில் ஆப்பிள் ஸ்டோர் என்னும் மொபைல் கடை உள்ளது. இங்கு ஐ ஃபோன்கள் விற்கப்பட்டு வந்தது. அத்துடன் ஐ ஃபோன்கள் பழுது பார்ப்பதும் நடை பெற்று வந்தது.
இங்கு ஐ ஃபோன் ஒன்று பழுது பார்க்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கும் ஊழியர் அந்த ஃபோனில் இருந்து பேட்டரியை கழற்றும் போது அது வெடித்துள்ளது. இதனால் அந்த ஊழியரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தக் கடையில் சுமார் 50 பேர்களுக்கு மேலிருந்தனர். அத்துடன் 7 ஊழியர்களும் இருந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தை அடுத்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப் பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர் விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது குறித்து ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்க மறூத்துள்ளது.