வாஷிங்டன்

செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போலச் சீற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.  அதையொட்டி வரும் ஜனவரி மாதம் அவர் பதவி விலகி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டி உள்ளது.   இறுதிக்காலம் ஆகியும் டிரம்ப் தனது கோபம், ஆத்திரம் எதையும் குறைத்துக் கொள்ளாமல் உள்ளார்.

அமெரிக்க அதிபர் அனேகமாகப் பல செய்தியாளர் சந்திப்புக்களில் செய்தியாளர்களிடம் மோதல் பாணியில் பதில் அளிப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.  சமீபத்திய செய்தியாளர் சந்திப்பிலும் டிரம்ப் அதே முறையில் நடந்துக் கொண்டது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு செய்தியாளர் டிர்ம்பின் தேர்தல் தோல்வி குறித்தும் அவர் எப்போது வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற உள்ளார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.  இதனால் கோபமடைந்த டிரம்ப் தாம் இன்னும் அமெரிக்க அதிபர் தான் எனவும் அதிபரிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது எனவும் சீறி உள்ளார்.