கர்நாடகா:
எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. சுயேச்சையாக போட்டியிடுவேன் என நடிகை சுமலதா அம்பரீஷ் கூறியுள்ளார்.

நடிகை சுமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தேன். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
தன் மகன் நிகில் கவுடாவை மாண்டியா தொகுதியில் நிறுத்த முதல்வர் குமாரசாமி விரும்புகிறார். எனவே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.
தங்கள் கட்சியில் சேருமாறு பாஜக தரப்பில் விடுத்த கோரிக்கையை சுமலதா நிராகரித்துவிட்டார். உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசித்தபின், மாண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்க சுமலதா முடிவு செய்துள்ளார்.
அம்பரீஷின் ஆதரவாளர்கள் தன் பக்கம் இருப்பதாகவும், அவரது வாரிசாக தன்னை நினைப்பதாகவும் சுமலதா தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]