சிட்னி: அணிக்கு தேவையானதை தன்னால் டெஸ்ட் போட்டியில் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த அனுமன் விஹாரி.

பயிற்சி ஆட்டத்தில் சதமடித்ததோடு, பகுதிநேர பந்துவீச்சாளராக அவர் விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்தப் பயிற்சி போட்டியில் அவர் 6வது நிலையில் பேட்டிங் செய்தார்.

அவர் கூறியதாவது, “இங்கிலாந்து பயணத்திற்கு அடுத்து, இது எனது இரண்டாவது வெளிநாட்டுப் பயணம். இது எனக்கு பெரிய சவாலான ஒன்று. அதேசமயம், நான் போட்டிக்காக, சிறப்பான வகையில் தயாராகியுள்ளேன் என்று உணர்கிறேன்.

நான்காம் நிலையில் களமிறங்குகையில், உங்களுக்கு அதிகநேரம் கிடைக்கும் என்று நீங்கள் உணர்வீர்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் எப்போதுமே 3ம் நிலையில் களமிறங்குவேன். அதேசமயம், அணிக்காக, எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறேன்.

புஜாராவுடன் விளையாடுவது சிறந்த அனுபவம். அவர், நிறைய டிப்ஸ்களை தந்துகொண்டே இருப்பார்” என்றுள்ளார் அனுமன் விஹாரி.

 

[youtube-feed feed=1]