டில்லி:
அவரை ஏன் அடித்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று டில்லியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய இளைஞர் தெரிவித்து உள்ளார். அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.
டில்லி பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு கடந்த வாரம் திறந்த வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த கெஜ்ரிவால் மீது, இளைஞர் ஒருவர் திடீரென பாய்ந்து அவரது கன்னத்தில் அடித்தார். இதனால் கெஜ்ரிவால் நிலைகுலைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அரவிந்த் கெஜ்ரி வாலை தாக்கிய நபர் பெயர் நபர் பெயர் சுரேஷ் (வயது 33) என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், முதல்வர் கெஜ்ரிவாலை தாக்கியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.
தான் சிறையில் இருந்தபோதுதான், தனது தவறை உணர்ந்ததாக தெரிவித்துள்ளவர், ஏன் அப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை என்றும், நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. என்னை யாரும் தூண்டிவிடவும் இல்லை என்று தெரிவித்தவர், போலீசார் என் தவறை சுட்டிக்காட்டி புரிய வைத்தனர் என்று தெரிவித்து உள்ளார்.