வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்த நிலையில்,  ‘மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன்’ என அறிக்கை வெளியிட்டு உள்ளார். மேலும்  அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்  நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணைஅதிபர் கமலாஹாரிஸ் களமிறங்கினார் இருவருக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவியது. இதில்,  டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, நாட்டு மக்களிடையே உரையாற்றிய டிரம்ப்,  “இது எனது வெற்றி அல்ல; அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற மக்களின் வெற்றி,” என்றும்   குடியரசு கட்சிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டு, இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறினார். வளமான அமெரிக்காவை உறுதிப்படுத்துவேன் என்றும், தன்னை அதிபராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் இனி பொற்காலம் வரப்போகிறது என்றும், மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை வீணாகாது என்றும் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரில்,  அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தனது கட்சி  ஆதரவாளர்கள்  2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறும் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு உறுதியளித்தார்.  அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற ட்ரம்பை தொடர்புக் கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.