ண்டிகர்

ரியானா துணை முதல்வராகப் பதவி ஏற்கும் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா செய்தியாளர்களிடம் உரையாடி உள்ளார்.

                                                                     அஜய் சவுதாலா

முன்னாள் அரியானா முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா, அவர் மகன் அஜய் சவுதாலா மற்றும் மருமகள் நைனா சவுதாலா ஆகியோர் மீது லஞ்சம், சதித்திட்டம் தீட்டுதல், போர்ஜரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டது.  அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு கட்னத 2013 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகின்றனர்.

                      துஷ்யந்த் சவுதாலா

அஜய் சவுதாலாவின் மகனும் ஜேஜேபி கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலாவுடன் இணைந்து பாஜ்க அரியானாவில் அமைச்சரவை அமைக்க உள்ளது.  இன்று மதியம் 2.15 மணி முதல் சண்டிகரில் உள்ள அரியானா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துஷ்யந்த் துணை முதல்வராகவும் பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த விழாவில் கலந்துக் கொள்ள துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா மற்றும் அவர் மனைவி நைனா சவுதாலா ஆகியோர் பரோலில் வந்துள்ளனர்.

அஜய் சவுதாலா செய்தியாளர்களிடம், “எனது மகன் துஷ்யந்த் என்னிடம் காங்கிரஸுடன் சேர வேண்டுமா அல்லது பாஜகவுடன் சேர வேண்டுமா எனக் கேட்டார். நான் எக்காரணத்துக்காகவும் காங்கிரஸுடன்  சேரக் கூடாது என சொல்லி விட்டேன்.

அத்துடன் அவரை நான் பாஜகவுடன் சேருமாறு ஆலோசனை அளித்தேன்.  தற்போது அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளார்.  இதனால் நான் பெருமை அடைகிறேன். இதன் மூலம் அரியானா மாநில பாஜக பலம் பெறுவதுடன் அது மாநிலத்துக்கு நன்மையை அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.