கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார்.
ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கல்லூரியை திறந்து வைத்து பேசிய அமித் ஷா, “சிறந்த மொழியான கன்னடத்தில் பேச முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து அவரது பேச்சை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கன்னடத்தில் மொழிபெயர்த்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை வந்த அமித் ஷா, ‘தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்’ என்று பேசியிருந்தார்.
இதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதையே கூறிவரும் அமித் ஷா தமிழை கற்றுக்கொள்ள எடுத்துள்ள முயற்சி என்ன என்று கேள்வி எழுப்பி விமர்சிக்கப்பட்டார்.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா “ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அவமானப்பட வேண்டும்” என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில், பெங்களூரில் மாணவர்களிடையே இன்று பேசிய அமித் ஷா, கன்னடத்தில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டு அப்ளாஸ்களை அள்ளிச் சென்றிருக்கிறார்.