தமிழ்- மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படம் “ஒட்டு”.

குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் மலையாள படம், “ஒட்டு”.

இந்த படத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ பட ஹீரோயின் ஈஷா ரெப்பா, குஞ்சாக்கோவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஈஷாவுக்கு இது முதல் மலையாளப்படம்.

இந்த படத்தில் மலையாளம் பேசுவதற்கு, ஆசிரியர் ஒருவரை சம்பளம் கொடுத்து, நியமித்து, அந்த மொழியை கற்று வருகிறார், ஈஷா.

“அரவிந்த் சாமியுடன் நடிப்பது பாக்கியம். எனது சின்ன வயதில் அவரது ரோஜா படம் பார்த்துள்ளேன். அவரது தீவிர ரசிகை நான்” என்கிறார், ஈஷா.

இந்த படத்தின் ஷுட்டிங் கோவாவில் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது.

– பா. பாரதி