க்னோ

த்திரப் பிரதேச சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தாம் பக்ரீத் கொண்டாடாத இந்து என்பதில் பெருமை அடைவதாக கூறி உள்ளார்.

கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உத்திரப்.பிரதேச சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி உரையாற்றும் போது, “ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையை முதல்வர் கொண்டாடியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.    இதற்கு முன் இருந்த முதல்வர்கள் ஹோலி, தீபாவளியோடு பக்ரீத் திருநாளையும் கொண்டாடி வந்துளனர்.  ஆனால் தற்போதைய முதல்வர் தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பவர்களுக்கு மட்டுமே முதல்வராக உள்ளனர்.   அவர் அனைவருக்கும் முதல்வர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”  எனக் கூறினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தனது உரையில், ”நான் இந்து.  அதுவும் பக்ரீத் கொண்டாடாத இந்து என்பதில் பெருமை அடைகிறேன்.  வீட்டில் பூணூல் அணிந்துக் கொண்டும் வெளியில் குல்லா அணிந்துக் கொண்டும் வேஷம் போட எனக்கு தெரியாது.   இது போன்ற ஒரு போலி வேடத்தை என்றும் இந்த பாஜக அரசு செய்யாது.   பக்ரீத் அமைதியாக கொண்டாட விரும்புவோருக்கு இந்த அரசு தனது முழு ஆதரவை அளிக்க தயாராக உள்ளது.  இந்துவாக இருப்பதிலும்,  இந்து என பெருமிதம் அடைவதில் எந்தத் தவறும் இல்லை” எனக் கூறி உள்ளார்.

முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் நேரடியாக சட்டசபையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உ. பி. யில்  பரபரப்பை உண்டாக்கி உள்ளது.