லன்டன்:
இந்தியாவில் வாங்கியுள்ள வங்கி கடன்கள் 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.
எஸ்பிஐ உள்பட பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் பெற்ற விஜய்மல்லையா, தற்போது லண்டனில் வசித்துவருகிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, இந்தியா கொண்டு வர முயற்சிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது ஜாமினில் உள்ள விஜய்மல்லையா நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லன்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா டிவிட் போட்டுள்ளார்.
அவரது பதிவில் “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளின் விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் 100 சதவீதம் வங்கி கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என உறுதியாக கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை ஏன்?
இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவை யெல்லாம் வர்த்தக தோல்விகளாகும். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன் என்ற பின்னரும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது,” என பதிவிட்டு உள்ளார்.