டில்லி:
போலியான விளம்பரங்களை கண்டு தான் ஏமாந்துள்ளதாக துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய ராஜ்ய சபா கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின்போது, அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, தான் போலி விளம்பரம் மூலம் ஏமாற்றப்பட்ட அனுபவத்தை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில், இந்த பதவிக்கு பின்னர், உடல் எடையை குறைக்கும் மாத்திரை குறித்த விளம்பரத்தை பார்த்து, தானும் ஸ்லிம்மாக ஆசைப்பட்டு, உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு மாத்திரைகள் குறித்து விசாரித்த கூறினார்.
அந்த நிறுவனமும், விளம்பரத்தை உறுதி செய்து நம்பிக்கையுடன் பேசி, ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மாத்திரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியது. நானும் அவர்கள் கூறியதை நம்பி, பணத்தை கட்டினேன். ஆனால், மாத்திரைகளுக்கு பதில் அவருக்கு இ மெயில் ஒன்று வந்ததாம்.
அதில், தேவைப்பட்டால் மற்றொரு மாத்திரையை வாங்கிக்கொள்ளுங்கள். அதுவும் ஆயிரம் ரூபாய்தான் என்றிருந்ததாம். மேலும் விரைவாக உடல் எடை குறையும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தான் முதல் மாத்திரையை அனுப்பினால்தான் 2-வது மாத்திரையை வாங்க முடியும் என்றேன்.
மேலும் அந்த விளம்பரத்தின்மீது சந்தேகம் கொண்டு, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் புகார் அளித்ததாகவும், விசாரணையில் அந்த மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் டெல்லியை சேர்ந்தது இல்லை என்றும் அமெரிக்காவை சேர்ந்தது என்றும் தெரியவந்தது என்று கூறிய வெங்கையா, இதுபோன்ற போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டும் என்றும்,
போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாத வகையில் கடுமையான சட்டங்களும், போலியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார்.