சென்னை:

நான் கூடத்தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்; ஆனால் நடக்க வேண்டுமே என்று  பாஜக துணை தலைவர் மு.க.ஸ்டாலினை, முதல்வர் ரேஞ்சில்  பேசியதற்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் விரக்தியாக பதில் அளித்துள்ளார்.

திமுக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக துணைத்தலைவர் அரசக்குமார், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினார். அப்போது,  யார் யாரையோ அடுத்த முதல்வர் என்கிறார்கள்.  ஆனால்  அதே வார்த்தையை நாம் ஸ்டாலினுக்குப் பயன்படுத்த வேண்டாம். அவர்  பல்லாண்டு காலமாக அந்தப் பதவிக்கு அருகில் இருந்தும் அதை முறைகேடாக அடைய நினைக்காதவர் ஆவார். அவர் தாம் ஜனநாயக வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதால்  அதற்காகக் காத்திருக்கிறார்.   வெகு விரைவில் அதற்கான காலம் கனிந்து  ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்.” என புகழ்ந்தார்.

இது பாஜக, அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நான் கூடத்தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்; ஆனால் நடக்க வேண்டுமே  என்று அங்கலாய்த்தவர், ஸ்டாலினை கடுமையா விமர்சித்தார்.

மதசார்பற்ற தலைவர் என கூறிக்கொள்ளும் ஸ்டாலிரன்,  ‘சிவசேனா போன்ற மதம் சார்ந்த ஒரு கட்சியின் தலைவர் முதல்வரானதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது நியாயமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.