சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் என டாக்டர் ஆயிஷாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது .
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்படுவதற்கு முன்பாக எடுத்தப்படம் என்று கூறப்பட்டது .
ஆனால் இறந்துபோனதாக சொல்லப்பட்ட டாக்டர் ஆயிஷா எனப்படும் புகைப்படம், தன்னுடைய படம்தான் என்று தென்னாப்ரிக்காவில் இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவி தற்போது கூறியுள்ளார் .
தன்னுடைய ஆறு புகைப்படங்களை திருடி டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் போலிக்கணக்கு உருவாக்கி அனைவரையும் ஏமாற்றியுள்ளனர் என்று சொல்கிறார் அந்த மாணவி.
நான் இறந்துவிட்டேனா என்று கேட்டு எனக்கு பல அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படங்கள் என்னுடையவை, எனது சமூக ஊடகக் கணக்கையும் எனது குடும்பத்தினரின் கணக்குகளையும் பின்தொடர்ந்த ஒருவரால் இப்படங்கள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார் அம்மாணவி .
மேலும் தென்னாப்ரிக்காவின் வால்டர் சிசுலு பல்கலைக்கழகத்தின் மத்தத்தா வளாகத்தில் இறுதி ஆண்டு பயில்வாதாக கூறும் அப்பெண் தனது கல்லூரி அடையாள அட்டையையும் ஆதாரமாக அனுப்பியுள்ளார் .