ரித்வார்

லோபதி மருத்துவம் படித்த 1000 மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற உள்ளதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பிரபல யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம்தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.  சமீபத்தில் அவர் அலோபதி மருத்துவத்தை முட்டாள்தனமானது எனக் கருத்து தெரிவித்தார்,   மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களை விட அலோபதி மருத்துவர்களால் அதிகம் பேர் மரணம் அடைந்ததாகக் கூறினார்.

இந்த கருத்து கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களும் அலோபதி மருத்துவர்களும் இந்த கருஹ்த்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையொட்டி பாபா ராம்தேவ் தனது கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.   ஆனால் சமீபத்தில் மற்றொரு சர்ச்சையில் அவராகவே சிக்கி உள்ளார்.

ஹரித்வாரில் நடந்த யோகா முகாமில் பாபா ராம்தேவ், “கடும் பக்க விளைவுகளை அலோபதி மருந்துகள் ஏற்படுத்தி வருவதால் எம்பிபிஎஸ், எம்.டி. படித்த மருத்துவர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பக்கம் திரும்பி நமது முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.  ஒரு சில அலோபதி மருத்துவர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகி நமது பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.

இன்னும் ஒரு ஆண்டுக்குள் நான் 1,000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற முடிவு செய்துள்ளேன்.   இது இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயாலாலைப் போல மதமாற்றம் செய்வது அல்ல.  அது  எனது நோக்கமும் அல்ல.  நான் அலோபதி மருத்துவத்தில் இருந்து ஆயுர்வேத மருத்துவத்தின் மீது அவர்களின் நம்பிக்கையை மாற்றுகிறேன்.” என உரையாற்றி அடுத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.