டெல்லி: கெஜ்ரிவாலிடம் அரசியல் வேண்டாம் என்றேன் ஆனால் அவர் கேட்க மறுத்து விட்டார் என கெஜ்ரிவாலின் குருவான அன்னா ஹசாரே வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுபான ஊழல் வழக்கில் சிக்கி ஜாமின் வெளி வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அவரின் குருவான அன்னரா ஹசாரே கெஜ்ரிவால் குறித்து கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலிடம் அரசியல் வேண்டாம். ‘சமூகத்துக்கு சேவையாற்றுங்கள் என்றேன் ஆனால், அவர் கேட்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வருபவர் மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முகமாக இருந்தார். இந்த இயக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடினார். ஊழலுக்கு எதிரான ஹசாராவேனி லோக்பால் இயக்கத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் இணைந்தார்.
பிறகு ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய கேஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அவரது முதல் 5ஆண்டு கால ஆட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது முறையும் அவர் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால்,. இந்த காலக்கட்டத்தில் ஆம்ஆத்மி அரசுமீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக மதுபான கொள்கை ஊழல், மாநில அரசையே புரட்டிப்போட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் முதல்வரான கெஜ்ரிவால், துணைமுதல்வராக இருந்த சிசோடியா என பலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில், ஆம்ஆத்மி கட்சி ஆட்டம் கண்டுள்ளது.
இந்த நிலையில், கெஜ்ரிவாலின் தற்போதைய நிலைமை குறித்து , அவரது குருவான அன்னா ஹசாரே கருத்து தெரிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த ஏப்ரலில் கெஜ்ரிவால்வ டெல்லி மதுபான கொள்கைஊழல் வழக்கில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, “கேஜ்ரிவால் கைதுக்கு அவரது செயல்களே காரணம். என்னுடன் பணியாற்றிபோது மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த கேஜ்ரிவால் தற்போது மதுபான கொள்கையை அமல்படுத்துவது வருத்தம் அளிக்கிறது’’ என்று அன்னா ஹசாரே கூறியிருந்தார்.
இந்த நிலையில், “நான் கேஜ்ரிவாலுடன் பணியற்றிய காலத்தில் ‘அரசியலில் சேர வேண்டாம், சமூகத்துக்கு சேவையாற்றுங்கள், நீங்கள் பெரிய மனிதராக மாறுவீர்கள்’ என்று அவரிடம் கூறிவந்தேன். சமூக சேவை மகிழ்ச்சி அளிக்கும் என கூறினேன். ஆனால் நான் கூறியதை அவர் கேட்கவே இல்லை. எதுநடக்க வேண்டும் என்று இருந்ததோ அன்று இன்று நடந்துவிட்டது’’ என்று அன்னா ஹசாரே வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.