டெல்லி:

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை தடுக்கும் என்று  ஐசிஎம்ஆர் பரிந்துரைத்து உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த கொய்னா மாத்திரை கள் சிறந்த தடுப்பு மருந்தாக உள்ளது என்று பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதை முதலில் ஐசிஎம்ஆர் ஆமோதித்திருந்தது.  பின்னர், இது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற பின்வாங்கியது.

தற்போது,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவரை தடுக்கும் சக்தி வாய்ந்த  மருந்தாக மருந்தாக ஹைட்ராக்சி குளோரோகுயின் கருதப்படுவதால், தற்போது அதற்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து இந்தியாவில் அதிக அளவு தயாராவதால் அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகள் ஹைட்ராக்சி குளோராகுயின் தங்களுக்கு வழங்க வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது. இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் கொரோனா தடுப்புக்காக இந்த மருந்தை அனுப்ப  இந்தியாவிடம் கோரிக்கை வைத்துவருவதால்,  ஏற்கனவே இந்த மருந்து ஏற்றுமதிக்கு  தடை விதித்திருந்த இந்தியா, தற்போது தடையை விலக்கி அமெரிக்கா,  பிரேசில் உள்பட பல நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட வர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை இப்கா ஆய்வகங்கள், சைடஸ் கேடிலா மற்றும் வால்லஸ் பார்மெட்டிக்கல்ஸ் ஆகிய மருந்து கம்பெனிகள் தயாரித்து வருகின்றன. தற்போது அவர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இப்கா ஆய்வகங்கள் மற்றும் சைடஸ் கேடிலா ஆகிய மருந்து கம்பெனிகளிடம் 10 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைகள் மூலம் சுமார் 71 லட்சம் பேருக்கு சிகிச்சைஅளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.