டில்லி:

மிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தின்  டெல்டா மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன்திட்டம் அமைக்க மத்தியஅரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக்ததில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் டெல்டா பகுதியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய அனுமதி எதிர்த்து மக்கள் சில ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற் கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கடந்த ஆண்டு கையெழுத்தானது.

அதன்படி,  “நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேதாந்தா நிறுவனம் உள்பட பல நிறுவனங்களுடன் மத்திய அரசு கைகோர்த்துள்ளது.

தமிழகத்தை பாலைவனமாக்கி வரும்  ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற மேலவையில் பேசிய   திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், 2,000 அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் என்று தெரிவித்த அவர், இந்தியா எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்தான், அதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம் என்றும், இந்தியா பணக்கார நாடாக  இருக்க நாம் விரும்பவில்லை, மாறாக, ஆரோக்கியமான நாடக இருக்க வேண்டும் என்றும், நாங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இதுபோன்ற திட்டத்தை மனிதர்கள் இல்லாத பாலைவனம் போன்ற ஓரிடத்தில் செயல்படுத்துங் கள் என்றும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும்  ஹைட்ரோகார்பன் திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.  இதே கருத்தை வலியுறுத்தி திமுக உறுப்பினர் டி.ஆர் பாலூம் பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது உன உறுதி அளித்தார்.