சென்னை: ஐதராபாத் – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், டெல்லி அணி நிர்ணயித்த 160 ரன்களை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணி, 7 ஓவர்களில் 62 ரன்களை எடுத்து, 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
வெற்றிக்கு, 78 பந்துகளில் 98 ரன்களை அந்த அணி எடுக்க வேண்டியுள்ளது.
அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 6 ரன்களுடன் அவுட்டாக, பேர்ஸ்டோ, 18 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது கேன் வில்லியம்சனும், விராத் சிங்கும் களத்தில் உள்ளனர்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை, துவக்க வீரர் பிரித்விஷா, 53 ரன்களை அடித்து, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது ரன்அவுட் ஆனார். ஷிகர் தவான் 28 ரன்களும், ரிஷப் பன்ட் 37 ரன்களும், ஸ்மித் 34 ரன்களும் எடுத்தனர்.