IPL 2016 ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த 34-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் இந்த வருடம் முன்னணி அணி குஜராத் லயன்ஸ் மோதின. ஐதராபாத் அணியில் நேற்று ஆட்டதில் இந்தியா வீரர் யுவராஜ்சிங் சேர்க்கப்பட்டார்காயம் காரணமாக இதுவரை நடந்த போட்டிகளில் விளையாடவில்லை. டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
FotorCreated
தொடக்கத்தில் இருந்து ஐதராபாத் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் மற்றும் நெஹ்ரா. 7 ஓவரில் குஜராத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட் ஆனார். பின்ச் மற்றும் பிராவோ சிறிய பாட்னர்சிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். பின்ச் ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்களை இழந்து 126 ரன்கள் எடுத்தது. . ஐதராபாத் அணித் தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் ரகுமான் சிற்பக பௌலிங் செய்தனர்..
வழக்கம் போல் கேப்டன் வார்னர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வில்லியம்ஸன், ஹென்ரிக்ஸ் மற்றும் யுவராஜ் சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தவான் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடி 19-வது ஓவரில் அணிக்கு வெற்றி தேடிதந்தார். தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.