பீஜிங்:

டந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு ஹண்டா எனப்படும் எலி வைரஸ் பரவி வருகிறது… இதனால் சீன மக்கள் மீண்டும் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

கடந்த ஆண்டு,  சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எலியின் மூலம் பரவும் புதிய ஹண்டா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த வைரஸ் தாக்குதலில் சிலியில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்கம், மற்ற வைரஸ் தொடர்பான நோய்களை பின்னுக்கு தள்ளியது.

இந்த நிலையில், தற்போது சீனாவில், ஹண்டா வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், எலியில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஹண்டா வைரஸ் தாக்குதல் உடலில் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு. காய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு ஏறபட்டும், இதையடுத்து,  உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து மரணம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா இப்போதுதான் சீனாவில் இருந்து விடைபெற்று சென்றுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ஒருசில நாட்கள்தான் சுதந்திரக்காற்றை சுவாசித்து வரும் நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.